யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளை தன் வசமாக்கிய இந்தியா :  ஒப்பந்தம்  கைச்சாத்து

யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 10.995 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு மானியமாக வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டது.

இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. நெடுந்தீவு, அனலத்தீவு மற்றும் நயினாதீவில் இந்த மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திட்டத்தை முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை தளமாக கொண்ட யு- சோலர் கிளீன் எனர்ஜி சொலுசன்ஸ் என்ற நிறுவனம் இந்த திட்டத்தின் கீழ் 530 கிலோவாட் காற்றாலை மின்சாரம்,  1700 கிலோவாட் சூரிய சக்தி, 2400 கிலோவாட் பேட்டரி சக்தி மற்றும் 2500 கிலோவாட் டீசல் மூலம் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தியை உருவாக்க உள்ளது. இந்த திட்ட உதவிகளிற்காக இலங்கைக்கான இந்திய தூதுவர், முன்னாள் தூதுவர் உட்பட இந்திய அதிகாரிகளுக்கு அமைச்சர் காஞ்சன விஜயசேகர நன்றி தெரிவித்துள்ளார்.