ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் உடல் தாயாரிடம் ஒப்படைப்பு.

சிறைச்சாலையில் மர்மமான முறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலக்ஸி நவல்னியின் உடல் அவரது தாயாரிடம் நேற்று சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நவல்னி சிறையில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி புட்டினால் நவல்னி கொல்லப்பட்டதாக அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் குற்றம்சுமத்தி வருகின்றனர்.

ஆனாலும் அந்த குற்றச்சாட்டை புட்டினின் அலுவலகம் மறுத்துள்ளது.

இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு நவல்னி விசம் கொடுத்து கொல்ல சதி இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில் சிகிச்சைக்குப் பின்னர் நாடு திரும்பிய எதிர்க்கட்சித் தலைவர் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.