தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவை மீள நடத்தினால், வழக்கை வாபஸ் பெறத் தயார்.
இலங்கை தமிழரசு கட்சியின் நிர்வாகத் தெரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறவுள்ளதாக சந்திரசேகரம் பரா தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் 27 ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற நிர்வாகத் பிரிவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீளப் பெறுவதாக (25) ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் உறுதியளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த சிரேஷ்ட தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சரவணபவன் ஆகியோர் மற்றும் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல் ஆகியோர் முன்னிலையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக பிரச்சினையை தீர்க்கும் முகமாக சமரச பேச்சுவார்த்தை இடம் பெற்ற வேளை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கைத் தாக்கல் செய்த சாம்பல்தீவு வட்டார கிளையின் செயலாளர் சந்திரசேகரம் பரா, கட்சியின் உயர்மட்ட குழுவினரிடம் கடந்த ஜனவரி 27 ஆம் திகதி நடைபெற்ற நிர்வாக தெருவினை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் வழக்கினை மீள பெறுவதாக மனுதாரர் சார்பில் ஆயர் முன்னிலையில் உறுதியளித்தார்.
இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சியின் உயர்மட்ட குழு இதனை நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்த தாகவும் தெரியவந்துள்ளது.
இக்கலந்துரையாடலின் போது தெரிவு செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் சண்முகம் குகதாசன் மற்றும் சாம்பல் தீவு வட்டார கிளையின் பொருளாளர் ராசையா பிரதீபன் ஆகியோர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.