தூத்துக்குடி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்ட காங்கிரஸ் முடிவு.

மீனவர்களை மீட்க தவறிய மத்திய மோடி அரசை கண்டித்து தூத்துக்குடி வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்ட இருப்பதாக காங்கிரஸ் தலைமையின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்து இன்று நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், நாளை ராமேஸ்வரம் கடலில் இறங்கி போராட்டம் நடத்தவுள்ள அகில இந்திய மீனவ காங்கிரஸ் தலைவர் ஆகியோரின் போராட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ் குமார் பங்கேற்கிறார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் இன்று பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் நடைபெற்றது. தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ‘கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அகில இந்திய மீனவர் சங்க தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் முன்னிலையில்  இராமேஸ்வரம் பாம்பன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம் நடைபெறும். இதற்கான தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது’ என்றார்.