ஐக்கிய மக்கள் சக்தி எமது தரப்புக்கு சவால் அல்ல: அறைகூவல் விடும் மகிந்த தரப்பு.

மஹிந்த ராஜபகஷவை நேசிக்கும் மக்களே இந்நாட்டில் உள்ளனர். அவர் களமிறக்கும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கு மக்கள் தயாராக உள்ளனர் என, நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி எமது தரப்புக்கு சவால் அல்ல.  ஏனெனில் அக்கட்சியின் தலைவரிடம் தலைமைத்துவ பண்பு கிடையாது. இதை நாம் கூறவில்லை. அக்கட்சியின் உறுப்பினர்கள்தான் குறிப்பிட்டுவருகின்றனர். நாம் களமிறக்கியுள்ள அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்களும் வெற்றிபெற்றுள்ளனர்.இம்முறையும் வெற்றி வேட்பாளர் களமிறக்கப்படுவார், மஹிந்த ராஜபக்ச பெயரிடும் வேட்பாளரை வெற்றிபெற வைப்பதற்கு நாட்டு மக்கள் தயாராகவே உள்ளனர் என தெரிவித்துள்ளார்.