யாழ்ப்பாணத்தில்  18 வயதுக்கும் குறைந்த  இளம் பெண்கள்  கர்ப்பமடையும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்.

யாழ்ப்பாணத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டில் 18 வயதுக்கும் குறைந்த 91 இளம் பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் கல்வி பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஆண்டில் 119 இளம் பெண்கள் கர்ப கால சிகிச்சைகளை பெற்றுள்ளதாக பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அவர்களில் 91 பெண்களே யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.

ஏனைய இளம் தாய்மார் வடக்கில் வேறு இடங்களில் உள்ள வைத்தியசாலைகளில் குழந்தைகளை பெற்றெடுத்திருக்கலாம் என வைத்தியசாலையின் கல்வி பணியகம் கூறியுள்ளது.எது எப்படி இருந்த போதிலும் போர் முடிவுக்கு வந்த பின்னர் வடக்கு மாகாணத்தில் 18 வயதுக்கும் குறைந்த சிறுமிகள் கர்ப்பமடையும் எண்ணிக்கையானது ஆண்டு தோறும் அதிகரித்து வருவது புள்ளிவிபரங்களின் அடிப்படையில் உறுதியாகியுள்ளது.

பாடசாலைக்கு சென்ற வேண்டிய சிறுமிகள் மிக இளம் வயதில் ஏற்படுத்திக்கொள்ளும் காதல் தொடர்பு காரணமாக அவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் மிக குறைந்த வயதில் திருமணம் செய்துக்கொள்வது பாராதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது என யாழ் போதனா வைத்தியசாலையின் கல்வி பணியகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.