காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் வழங்குவதன் மூலம் அவர்களுடன் பேரம் பேசும் நடவடிக்கையில் அரசாங்கம்.

காணாமல்போனவர்களின் உறவுகளிற்கு பணம் கொடுத்து அவர்களுடன் பேரம்பேசும் அநியாயமான மக்கள் நடவடிக்கையில்அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என அரகலய போராட்டக்காரர்களில் ஒருவரான அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற காணாமல்போன உறவுகளின் போராட்டத்தில் கலந்துகொண்டவேளை அவர்  இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் பேரவைக்கான இயக்கமாக இன்று கிளிநொச்சியில் ஒன்று கூடி காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவளிக்கின்றோம்.  இதுவரை ஏழு வருடங்களாக தொடரும் போராட்டத்தின் மூலம் வடக்கின் தாய்மார்கள் தமது பிள்ளைகளுக்காகவும் குடும்பத்திற்காகவும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

ரணில் ராஜபக்சவின் மக்கள் விரோத அரசாங்கம் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு பணம் கொடுத்து வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களை மேலும் மிதிக்கும் பேரங்களை செய்யும் அநியாய வேலைத்திட்டத்தை செய்து வருகின்றது.  நாங்கள் மக்கள் பேரவைக்கான இயக்கமாகவும் மக்களாகவும் நீதிக்காக வடக்கிலும் தெற்கிலும் ஒன்றுபடுவது இன்றியமையாதது.