யாழ்ப்பாணத்தில் கெசினோ ஆரம்பிக்க திட்டம்.

கெசினோ மூலம் பொருளாதாரத்தை வழிநடத்த அரசாங்கம் முற்படுகிறது. கெசினோவுக்கு அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவில்லை என அரசாங்கம் கூறியது.

ஆனால், தற்போது கொழும்பில் மாத்திரமல்ல கண்டி, காலி, யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் கெசினோவை அமைப்பதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

“கோட்டா கோ கம“ அமைக்கப்பட்டு காலிமுகத்திடலில் அரகலய போராட்டம் இடம்பெற்ற பகுதியில் கெசினோவொன்றை அமைக்க சீன நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்க உள்ளீர்கள்.

இலங்கையில் இடம்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் அது. நாட்டில் பாரிய புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. அந்த இடத்தில் கெசினோவை அமைக்க முற்படுகிறீர்கள்.

அரசாங்கம் நாட்டு மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது. போராடிய மக்களுக்கு இழுக்கை ஏற்படுத்த வேண்டாம்.“ என்றார்.