தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற  பிரித்தானிய தமிழ் இளைஞர் சங்கமன் கௌறிபாலன்உயிரிழந்துள்ளார்.

தாய்லாந்தில் கயாக்கிங் என்னும் படகுச்சவாரியில் ஈடுபட்டபோது  ஏரியின் ஆழமான பகுதியில் தவறி விழுந்து காணாமல் போனதாக கூறப்பட்ட  சவுத் வேல்ஸைச் சேர்ந்த பிரித்தானிய தமிழ் இளைஞர்  உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

24 வயதான சங்கமன் கௌரிபாலன், என்னும் இளைஞரே  பிப்ரவரி 11, ஞாயிற்றுக்கிழமை தாய்லாந்தில் உள்ள காவ் சோக் தேசிய பூங்காவில் உள்ள ராஜ்ஜபிரபா அணை நீர்த்தேக்கத்தில் தனது நண்பர்களுடன் கயாக்கிங் செய்து கொண்டிருந்தபோது, ஏரியில் விழுந்துள்ளார். மீட்புப் பணியாளர்கள் மற்றும் ஸ்கூபா ஓட்டுநர்கள் அடங்கிய குழுவின் மூன்று நாள் தேடுதலுக்குப் பிறகு அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

1640 அடி  ஆழமான பகுதியில் விழுந்த சங்கமம் கௌரிபாலனால்  பாதுகாப்பாக நீந்த முடியவில்லை என்றுமு; அதிகாரிகளின் உதவியை நாட அவரது நண்பர் கரைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் மூன்று நாட்களின் பின் கரையொதுங்கிய அவரது உடல் உடல் பான் தா குன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரின் மரணம் தொடர்பாக வேல்சில் உள்ள அவரது பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டதாகவும், சங்கமனின் மரணம் விபத்து என்றும் போலீஸ் லெப்டினன்ட் கொங்யுத் நூமுவான் கூறினார்.