முதலாவது ரி20 போட்டியில் இலங்கை அணி4 ஓட்டங்களால் வெற்றி.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
தம்புள்ளையில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் Wanindu Hasaranga அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றதுடன், Sadeera Samarawickrama 25 ஓட்டங்களையும் Dhananjaya de Silva 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Fazalhaq Farooqi 3 விக்கெட்டுக்களையும், Naveen-ul-Haq மற்றும் Azmatullah Omarzai ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் Ibrahim Zadran ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றார்.
இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் Matheesha Pathirana 4 விக்கெட்டுக்களையும், Dasun Shanaka 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஐ்ஐியம் என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.