ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைக்கும் பிரதமர் மோடி
ஐக்கிய அரபு அமீரக பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி கட்டார் சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு டோஹா விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்டார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானியை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கட்டார் நாடுகளுக்குச் செல்கிறேன். எனது இந்த பயணம் இவ்விரு நாடுகளுடன் இந்தியாவுக்கு இருக்கும் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும். பிரதமராக பதவியேற்ற பின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஏழாவது முறையாக செல்கிறேன். இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையே உள்ள நட்புறவின் ஆழத்தை இது காட்டுகிறது. எனது சகோதரர் முகம்மது பின் ஜயாதை சந்திக்க இருக்கிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை திறந்து வைக்கும் கௌரவத்தைப் பெற இருக்கிறேன்.
அபுதாபியில் உள்ள இந்திய சமூகத்துடன் உரையாட உள்ளேன். கட்டார் அதிபர் தமிம் பின் ஹமாத்ஐ சந்திக்க உள்ளேன். தமிம் பின் ஹமாத் தலைமையில் கட்டார் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது’ என்று பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். மேலும், இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்து வாழும் மக்களையும் அவர் சந்தித்திருந்தார்.