ஜனாதிபதி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருகின்றார்-மைத்திரிபால சிறிசேன
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது குறித்து ஆராய்வதற்காக சட்டத்தரணிகள் குழுவொன்றை ஜனாதிபதி நியமித்துள்ளார் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வஜனவாக்கெடுப்பா நாடாளுமன்ற தேர்தலா முதலில் இடம்பெறும் என தெரியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் சபாநாயகர் கருஜெயசூர்ய தலைமையிலான குழுவொன்றை நிறைவேற்று அதிகாரமுறை நீக்கம் தொடர்பாகஆராய்வதற்காக ரணில்விக்கிரமசிங்க நியமித்துள்ளார் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அரசமைப்புசீர்திருத்தத்திற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலா அல்லது சர்வஜனவாக்கெடுப்பா முதலில் வரும் என சொல்ல முடியாத நிலை காணப்படுகின்றது இது உங்கள் மத்தியில் காணப்படும் கேள்விமாத்திரமல்ல எனக்கும் இந்த கேள்வி உள்ளது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்கவிடமும் இதற்கான விடையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.