ஜனாதிபதிக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான இரகசிய  சந்திப்பு.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, நேற்றையதினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.நாடாளுமன்றத்தின் புதிய அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய கொள்கை உரையின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதிக்கும் சரத் பொன்சேகாவுக்கும் இடையிலான சந்திப்பு, சுமார் இருபது நிமிடங்கள் நீடித்ததுடன் அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை. நாடாளுமன்றில் நேற்றைய தினம் ஜனாதிபதி உரையாற்றிய போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அவையை விட்டு வெளிநடப்பு செய்திருந்தனர்.

எனினும் சரத் பொன்சேகா, குமார வெல்கம, ராஜித சேனாரத்ன போன்ற கட்சியின் சில உறுப்பினர்கள், அவையில் அமர்ந்திருந்து ஜனாதிபதியின் உரையை செவிமடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.