தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தோம்: எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.மக்களவை தேர்தலில் அதிமுக சிறப்பான கூட்டணியை அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாமக்கல் மாவட்டம் அதிமுகவின் எஃகு கோட்டை என நிரூபித்தவர் முன்னாள் அமைச்சர் தங்கமணி. எதிரிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்த அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் பாடுபட வேண்டும். தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே பாஜக கூட்டணியில் இருந்து பிரிந்தோம். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் சிறப்பான கூட்டணி அமையும் இவ்வாறு கூறினார்.