விஜய்யை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கும் விஷால்.

விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நிலையில், விஷாலும் விரைவில் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சினிமா பயணத்தில் இருந்து அரசியல் பயணத்தில் காலெடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து உள்ளார்.

இவர், கட்சியை தொடங்கியதை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த நிலையில் நடிகர் விஷாலும் கட்சி தொடங்க தயாராகி உள்ளதாக தெரிகிறது. முன்னதாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பிய விஷாலின் வேட்பு மனு தள்ளுபடி ஆகி விட்டது. இப்பொது, தனது ரசிகர் மன்ற பெயரையும் ‘விஷால் மக்கள் நல இயக்கம்’ என மாற்றி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், விரைவில் கட்சியின் பெயரை அறிவித்து 2026 தேர்தலில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.  தற்போது, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியை தொடங்க முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. விரைவில், தனது கட்சியின் பெயரை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.