2026 இல் நானே  தமிழக முதலமைச்சர்: அண்ணாமலை எதிர்பார்ப்பு.

பெப்ரவரி 25ம் தேதி பல்லடத்தில் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பல்லடத்தில் பிப்ரவரி 25ம் தேதி என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா நடைபெற உள்ளது.

என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.தென் மாவட்டங்களுக்கு பிரசாரம் செய்ய பிரதமர் மோடி வருவார். கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

பிரதமர் மோடியை ஏற்கும் அனைவரும் பாஜக கூட்டணியில் இடம்பெறுவர். இம்மாத இறுதிக்குள் பாஜக கூட்டணி பற்றி தெரியவரும்.இந்த தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி அனைவரும் திரும்பி பார்க்கும் வகையில் இருக்கும் இவ்வாறு கூறினார்.