வெளிநாட்டவர்கள் வீடு வாங்க முடியாது: மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தடை நீடிப்பு
ரியல் எஸ்டேட் சந்தை மீண்டும் பின்னணியில் கனடா அரசாங்கம் வெளிநாட்டு வீடு வாங்குவோர் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கம், கனேடியர்கள் அல்லாதவர்கள் குடியிருப்பு ரியல் எஸ்டேட் வாங்குவதை 2022ஆம் ஆண்டு தடைசெய்தது, இந்த நடவடிக்கை ஜனவரி 1, 2025 அன்று காலாவதியாகும்.
எனினும், இப்போது குறித்த திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், ஜனவரி 1, 2027ஆம் ஆண்டு வரை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
“வெளிநாட்டு வாங்குவோர் தடையை நீட்டிப்பதன் மூலம், கனேடிய குடும்பங்கள் வாழ்வதற்கான வீடுகள் பயன்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம் என நிதி அமைச்சர் கிறிஸ்டியா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கனேடியர்கள் அல்லாதவர்கள் காலியான நிலம் அல்லது குடியிருப்பு சொத்துக்களை அபிவிருத்திக்காக வாங்குவதற்கு அரசாங்கம் விலக்கு அளித்துள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பணி அனுமதி பெறுபவர்களுக்கு விலக்குகள் உள்ளன, அவர்கள் நீண்ட காலமாக நாட்டில் இருந்திருந்தால் மற்றும் ஏற்கனவே சொத்து வாங்கவில்லை என்றால் அவர்களுக்கு விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் பிற்பகுதியில் கனடா மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் நிலையில் இருப்பதால், வீட்டுச் சந்தையில் செயல்பாடு சமீபத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியது.
கனடாவில் அரசாங்கத்தின் பல நிலைகள் வீட்டுச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்த வாரம், டொராண்டோ நகர சபையானது, குடியிருப்பாளர்கள் அல்லாதவர்களின் வீட்டுக் கொள்வனவுகளுக்கு சொத்து மதிப்பில் 10 வீதத்திற்கு வரி விதிக்கும் பிரேரணையை பரிசீலிக்கவுள்ளது.