Gare de Lyon ரயில் நிலையத்தில் கத்தியால் தாக்குதல்!

காலை நேரம் பரபரப்பு பயணிகள் மூவர் காயம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் நகரின் gare de Lyon ரயில் நிலையத்தில் இன்று சனிக்கிழமை காலை எட்டு மணியளவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் பயணிகள் மூவர் படுகாயமடைந்தனர். கத்தியுடன் தோன்றிய நபர் ஒருவர் பயணிகளைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளார். பொலீஸார் விரைந்து தலையிட்டு அந்த நபரை மடக்கிப் பிடித்துவிட்டனர்.
தாக்குதலாளி மாலி நாட்டைச் சேர்ந்த முப்பது வயது மதிக்கத் தக்க நபர் என்றும், அவரிடம் இருந்து இத்தாலி நாட்டு வாகன சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பொலீஸார் மீட்டுள்ளனர் எனவும் முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன. தாக்குதலின் நோக்கம் என்ன என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. பயணிகளைத் தாக்கிய போது தாக்குதலாளி கோஷம் எதனையும் எழுப்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
பொலீஸார் மற்றும் அம்புலன்ஸ் சேவையினர் தலையிட்டதன் காரணமாக ரயில் நிலையத்தின் பயணிகள் மண்டபங்கள் 1,2 (halls 1, 3) ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டன.
தாக்குதல் சம்பவத்தை அடுத்து அந்த நிலையத்தின் ஊடாகச் செல்கின்ற ரயில் சேவைகள் தாமதமடைந்தன. சம்பவத்தை அறிந்த பயணிகள் பதற்றமடைந்து நிலையத்தை விட்டு வெளியேறத் தலைப்பட்டனர்.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">