சுதந்திர தினம்-கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்.
பெப்ரவரி 04 இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து அமுல்படுத்தப்படவுள்ளது.
- ஜனவரி 29 முதல் பெப்ரவரி மாதம் 2 வரை காலி வீதி, கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து காலிமுகத்திடல் வரையும், செரமிக் சந்தி தொடக்கம் காலிமுகத்திடல் வரையும் காலை 6.00 மணிமுதல் 8.30 மணி வரையும் மூடப்படும்.
- குறித்த நாட்களில் காலை 11.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையும் குறித்த வீதி மூடப்படவுள்ளது.
-
பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணி முதல் சுதந்திர தினம் நிறைவடையும் வரையிலும் மேற்குறிப்பிட்ட வீதி மூடப்படும் – என்றார்.