நிகழ்நிலை காப்புச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானதாகும்-இராசமாணிக்கம் சாணக்கியன்.

நிகழ்நிலை காப்புச் சட்டம் தமிழ் மக்களுக்கு எதிரானதாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாட்டில் கொண்டுவரப்பட்ட பல சட்டங்கள் தமிழ் மக்களை அடக்குவதற்கும், ஒடுக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டன. பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் தமிழ் மக்களை ஒடுக்குவதற்கே பயன்படுத்தப்பட்டது.

வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகங்கொடுக்கு ஒரு பிரச்சினைக்கான போராட்டம் குறித்து ஒரு அறிவித்தல் விடுத்து அதனை பகிர்வர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க முடியும். மயிலத்தமடு, மாதவனை பிரச்சினையை வெளிப்படுத்தும் நபர்களுக்கு கூட இந்தச் சட்டம் பயன்படுத்தக்கூடும்.

காணாமல்போனோர்கள் எழுப்பும் குரல்களுக்கு எதிராகவும் நடவடிக்கைகளை எடுக்க முடியும். உருவாக்கப்படும் ஆணைக்குழுதான் நாட்டு மக்களின் கருத்தை உருவாக்க முடியும். தனிப்பட்ட நபர்களின் கணினி மற்றும் தொலைபேசிகளை எவ்வித நீதிமன்ற உத்தரவுகளுமின்றி ஆராயும் அதிகாரத்தை சட்டம் வழங்குகிறது.

மக்கள் ஆட்சிக்கு எதிரான ஒரு சட்டமாக இது உள்ளது. இதற்கு ஆதரவளிக்கும் நபர்கள் மக்கள் ஆணையை காட்டிக்கொடுப்பவர்களாகும். அரசாங்கத்துக்கு எதிராக எழுச்சியடையும் மக்கள் போராட்டங்களை நிகழ்நிலை காப்புச் சட்டம் மூலம் ஒடுக்க முடியும்.” என்றார்.