கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதால் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்-சஜித் பிரேமதாச

நிகழ்நிலை காப்புச்  சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை வெளியிடுகிறோம் என விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சட்டமொன்று கொண்டுவரப்பட முன் அனைத்து தரப்பினரினதும் கருத்துகளை பெற்றுக்கொண்டு உரிய நடைமுறைகளின் பிரகாரம் நிறைவேற்றப்பட வேண்டும்.

உத்தேச சட்டமூலத்தின் 54 சரத்துகளில் 34 சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணாக உள்ளதாக உயர்நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது. துறைசார் மேற்பார்வை குழு இதில் என்ன செய்துள்ளதென தெரியவில்லை. கலியுகம்

இது தேர்தல் வருடமாக இருப்பதால் மக்கள்னி கருத்துச் சுதந்திரம், அடிப்படை உரிமைகளை பறிக்கும் நோக்கில் ஜனாதிபதி இந்த விடயத்தை மேற்கொண்டுள்ளார். ஒரு நபரின் விபத்துக்கு சேறு பூசும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதனை வரவேற்கிறோம்.

என்றாலும், இவை அனைத்தும் ஆழமான கருத்தாடல்களின் பின்னரே செயல்பாட்டுக்கு வர வேண்டும். கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதால் டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பு ஏற்படும். மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ஒரு நாட்டுக்கு இவ்வாறான சட்டங்கள் கடுமையான பாதிப்பு ஏற்படும்.