ஆனையிறவு பகுதியில் கோரவிபத்து.

கணவனையும் மகனையும் வெளிநாடு அனுப்பி வீடு திரும்பிய பெண் பலி.

ஆனையிறவு பகுதியில் இன்று புதன்கிழமை (24) அதிகாலை 4.45 மணியளவில் இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒன்பது பேர் வரையில் காயமடைந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த எருமை மாடுகளுடன் மோதி எதிரே வந்த கயஸ் வேனிலும் மோதி விபத்து இடம் பெற்றுள்ளது.

விபத்தின் போது கயஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிர் இழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Kilinochchi Accident

இவர்களில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், ஏனையவர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, விபத்தில் 9 எருமை மாடுகள் உயிரிழந்துள்ளதுடன், நான்கு மாடுகள் காயமடைந்துள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை வாகன விபத்தில் வெளிநாட்டு செல்லும் கணவரையும் மகனையும் விமான நிலையத்தில் வழியனுப்பி விட்டு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருந்த பெண் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

விபத்தில் யாழ் பாசையூரைசேர்ந்த மார்க் வெஸ்லி அலன் கத்தரின் என்ற மூன்று பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதுடன், இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Kilinochchi Accident