துப்பாக்கி சூட்டில் பிக்கு பலி; பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்.
கம்பஹா மல்வத்துஹரிப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கம்பஹா, மல்வத்துஹரிப்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான புதிய தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
கார் ஒன்றில் வந்த நால்வர் கொண்ட குழுவினரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு, தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த பிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காரில் பயணித்த அடையாளம் தெரியாத குழுவினர் T-56 துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
துப்பிக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
44 வயது கலபலுவானே தர்மரத்ன தேரர் என்ற பிக்குவே சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார்.
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் பிக்கு ஒருவர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தேரர் மல்வத்துஹிரிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஞானராம விகாரையில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வந்துள்ளார்.
ஜோதிட வேலை செய்ய வந்த நால்வர் கொண்ட ஒரு கும்பலால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்கள் CAO-5345 என்ற எண் கொண்ட ஊதா நிற காரில் வந்துள்ளனர்.
குறித்த கார் மாலபே, சுதர்சன் மாவத்தையில் அமைந்துள்ள நிறுவனமொன்றுக்கு சொந்தமானது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
உயிரிழந்த பிக்குவின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.