ரியூனியன் தீவை பெரும் சூறாவளி கடக்கின்றது!
மக்கள் முற்று முழுதாக வீடுகளுக்குள் முடக்கம்.
????சிவப்பைத் தாண்டி அங்கு ????”ஊதா”நிற உஷார் நிலை
இந்து சமூத்திரத்தில் அமைந்துள்ள இந்தத் தீவை “பெலால்” (Belal) எனப் பெயரிடப்படுகின்ற சூறாவளிக் காற்று மணிக்கு 200 – 250 கிலோ மீற்றர்கள் வேகத்தில் தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்படுகின்ற மிக மோசமான சூறாவளி அனர்த்தமாக இது இருக்கக் கூடும் என்று வானிலை நிபுணர்கள் எதிர்வு கூறியிருப்பதால் தீவு மக்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வீடுகளுக்குள் முடங்கியிருக்குமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புப் பணியாளர்கள் உட்பட உதவி மீட்புக் குழுக்களையும் வெளியே நடமாட வேண்டாம் என்று ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக ரியூனியன் பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
சூறாவளி கடக்கும் வரை – குறைந்தது செவ்வாய்க்கிழமை காலை வரை – வீடுகளை விட்டு வெளியேறாதீர்கள் எனத் தீவில் வசிக்கின்ற சுமார் எட்டு லட்சத்து 50 ஆயிரம் மக்களுக்கும் கண்டிப்பான ஆலோசனை விடுக்கப் பட்டிருக்கிறது. அங்கிருந்து பிந்திய செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.