’அவலோகிதேஸ்வர போதிசத்வா’ கைது

இலங்கையில் ‘அவலோகிதேஸ்வர போதிசத்வா’ என தன்னைத் தானே அறிவித்துக் கொண்ட மகிந்த கொடித்துவக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘அவலோகிதேஸ்வரர்’ என்று கூறிக்கொள்ளும் குறித்த நபர் பன்னிபிட்டியவில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த வாரம் கொடித்துவக்குவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​கோட்டை நீதவான் நீதிமன்றினால் அவருக்கு  பயணத்தடை விதிக்கப்பட்டது.

மேலும் அவரது வங்கிக் கணக்குகளை விசாரிக்குமாறும் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பௌத்த மதத்திற்கு எதிரான மதச் செயல்களில் ஈடுபட்டதாக மஹிந்த கொடித்துவக்கு  மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.