கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மோதல்-பலர் காயம் .

கந்தகாடு சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 19 பேர் காயமடைந்துள்ளதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

மேலும், 60க்கும் மேற்பட்ட கைதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், தப்பிச் சென்றவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.