லண்டனில் காரைநகர் இளைஞருக்கு நடந்த கதி.

லண்டன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.கொலை செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த இளைஞன் என தெரிவிக்கப்படுகின்றது.

8ம் திகதி திங்கட்கிழமை இரவு நடந்த இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்கள். குறித்த இளைஞன் பலகலைக்கழத்தில் கற்றவரும் நிலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயிலில் பயணிக்கும் போது அவரைப் பின்தொடர்ந்து வந்தவர்களினால் இந்த கொடூர சம்பவம் நடத்தப்பட்டுள்ளது.

ரூவிக்கினம் பகுதியில் உள்ள ஸ்ரோபறி ஹில் புகையிரத நிலையத்திற்கு பிரித்தானியா போக்குவரத்து பொலிசார் வரவழைக்கப்பட்டனர். பலத்த காயங்களுடன் கத்தியால் குத்தப்பட்ட இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் 16 வயது சிறுவனும் காலில் கத்திக்குத்திற்கு உள்ளாகி இருந்தார் என்றும் அவர் அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு  அவரது உயரிற்கு ஆபத்து இல்லை எனவும் தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

உயிரிழந்த இளைஞனின் பெற்றோர் காரைநகரைச் சேர்ந்த சேர்ந்தவர்கள் எனவும், லண்டனில் தொழில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தம்பதிகளின் நான்கு பிள்ளைகளில் மூத்த மகனே இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆவார். உயிரிழந்தவர் தொடர்பான விபரங்களை இன்னும் பொலிசார் வெளியிடவில்லை. ஒரு இளைஞனின்  சோகமான மரணம்  அர்த்தமற்ற வன்முறையில் நிகழ்ந்துள்ளதாக பொலிசார் கவலை வெளியிட்டுள்ளனர்.