36,385 பட்டதாரி ஆசிரியர்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர்.

தேசிய மற்றும் மாகாண மட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 36 ஆயிரத்து 385 பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அத்துடன் 14,385 மாகாண மட்ட ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பிலும் மேலும் 21,000 அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமிப்பது தொடர்பிலும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணைகள் இந்த வாரத்தில் இடம்பெற்று அதற்கான தீர்ப்பு கிடைத்ததும் உடனடியாகவே அந்த நியமனங்களை வழங்குவது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ரோஹிணி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்