இன்று கனத்த மழை பெய்யும் -வளிமண்டலவியல் திணைக்களம்.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் இன்று 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பில், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.

மத்திய மாகாணம், வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மணிக்கு 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் மக்களுக்கு அறிவித்துள்ளது.