இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 106 பாலஸ்தீனியர்கள் பலி.
இஸ்ரேலின் கடுமையான வான்வழி தாக்குதல்கள் காரணமாக அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர். பாலஸ்தீனியர்கள் தங்கியுள்ள முகாம்களின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
திங்கள் மற்றும் ஞாயிறு இரவு மத்திய காஸா பகுதியில் உள்ள டெய்ர் அல்-பலாஹ் நகருக்கு அருகில் உள்ள அல்-மகாசி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 106 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் மூன்று மாடி கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்ட காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
காஸா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு ஆரம்பித்த பின்னர் நடந்த இந்த தாக்குதல் மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றாகும்.
கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் 250 பேர் கொல்லப்பட்டதாகவும், 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும் ஹமாஸ் கூறியுள்ளது.