வருட இறுதி வரை கன மழை -வெள்ள அபாய எச்சரிக்கை.

வங்காள விரிகுடாவின் கடல் பிராந்தியத்தில் உருவாகியிருந்த காற்றுச் சுழற்சியானது தற்போது இலங்கையின் தென்கிழக்காக காணப்படுவதால், தொடர்ந்தும் நாட்டில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் தென் சீன கடல் பிராந்தியத்தில் உருவாகியுள்ள மற்றுமொரு காற்று சுழற்சி காரணமாக தெற்கு அந்தமான் கடல் பிராந்தியத்தின் ஊடாக நகர்ந்து நாளை முதல் 24ஆம் திகதி வரை இலங்கைக்கு அண்மையாக வர உள்ளது.

அத்துடன் எதிர்வரும்; 27ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையான காலப் பகுதிகளில் மீண்டும் ஒரு காற்று சுழற்சியானது இலங்கைக்கு அண்மையாக வர வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதனால்; அதிக மழையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் சாத்தியக்கூறுகள் காணப்படும்.

பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.