குவைத்தின் புதிய மன்னராக ஷேக் மிஷால் நியமனம்.

குவைத்தின் புதிய மன்னராக ஷேக் மிஷால் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாஹ்வை அந்நாட்டு அரசாங்கம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

குவைத்தின் மன்னராக இருந்த ஷேக் நவாஃப் அல் அஹ்மத் அல் ஜாபர் அல் சபாஹ் தனது 86வது வயதில் இன்று காலமானார்.

இதனையடுத்து புதிய மன்னரை அறிவிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன்படி, சற்று முன்னர் நாட்டின் புதிய மன்னராக ஷேக் மிஷால் அறிவிக்கப்பட்டுள்ளார்.