ஐ.மக்கள் சக்தியுடன் இணையவுள்ள மொட்டுக்கட்சியின் 25 எம்.பிக்கள்.

ஆளும் கட்சியின் அங்கம் வகிக்கும் சுமார் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர்.

இவர்கள் எதிர்காலத்தில் ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியாகவும் அரசியல் கூட்டணியாகவும் செயற்படுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும் புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நிறுத்துவது குறித்தும் இவர்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் சுஜீவ சேனசிங்க குறிப்பிட்டுள்ளார்.