640 ரூபாவால் அதிகரிக்கவுள்ள சமையல் எரிவாயு விலை.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை கணிசமான அளவில் அதிகரிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி 2024 முதல், எரிவாயு மீது 18% VAT வரி சேர்த்து விலை அதிகரிக்கப்படும் என்று நிறுவனம் கூறுகிறது.
வரி அதிகரிப்புடன் இந்த முடிவு எடுக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஷ் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது ரூ.3565 ஆக இருக்கும் 12.5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு கொள்கலன் 18%, அதாவது ரூ.640 ஆல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
புதிய விலை விபரங்கள் ஜனவரி மாதம் 4ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது