ரிஷியின் ருவாண்டா திட்டத்தை விமர்சித்ததால்  கொலை மிரட்டலுக்கு உள்ளாகி உள்ளாகி இருக்கும் ருவாண்ட பெண்.

புகலிடக்கோரிக்கையாளர்களை நாடுகடத்தும் பிரித்தானிய அரசின் திட்டத்தை விமர்சித்த ருவாண்டா நாட்டு அரசியல்வாதி ஒருவர், தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும், தான் உயிர் பயத்திலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரின் புகலிடக்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்வரை, அவர்களை ருவாண்டா போன்ற ஏதாவது ஒரு ஆப்பிரிக்க நாட்டுக்கு அனுப்பி அங்கு தங்கவைக்க பிரித்தானிய அரசு திட்டமிட்டு வருகிறது.

இத்திட்டத்தின் படி புகலிடக்கோரிக்கையாளர்களின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவர்கள் ருவண்டாவிலேயே வாழ அனுமதிக்கப்படுவார்கள் அல்லது வேறு ஏதேனும் ஒரு நாட்டுக்குத்தான் பெரும்பாலும் கொண்டு செல்லப்படுவார்களேயொழிய, அவர்கள் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதுதான் அச்சத்தை உருவாக்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.  இந்த நிலையில் மேல்முறையீட்டு நீதிமன்றம், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானிய அரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறியதுடன், ருவாண்டா பாதுகாப்பான நாடாக கருதப்பட்ட முடியாது என்றும் அதிரடியாக தீர்ப்பளித்தது.

தீர்ப்பை ஏற்க மறுத்த பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பிரத்தனம் எடுத்துவருகின்றார். இதேவேளை ருவாண்டா நாட்டு எதிர்க்கட்சி அரசியல்வாதியான விக்ரோறி என்பவர் ருவாண்டா அகதிகளை நடத்தும் விதம் குறித்து பிரித்தானிய ஊடகம் ஒன்றில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.   அதைத் தொடர்ந்து விக்ரோறிக்கு கொலை மிரட்டல்கள் வரத்துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ருவாண்டா ஜனாதிபதியின் உதவியாளர், விக்ரோறி தனது சொந்த நாட்டை பாதுகாப்பற்ற நாடு என்று கூறி, உலக அரங்கில் அவமானப்படுத்திவிட்டதாக கொந்தளித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்கள் மாயமாகிவருவதாகவும், மர்மமான முறையில் கொல்லப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள விக்டீராறி  தனக்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருவதாகவும், ரிஷியின் ருவாண்டா திட்டத்தை விமர்சித்ததால் தான் உயிர் பயத்திலிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.