மாதம் 100 ஈரோ வாடகைக்கு எலெக்றிக் கார்!

மக்ரோனின் திட்டம் ஜனவரியில் ஆரம்பம்

Kumarathasan Karthigesu-பாரிஸ்

வருமானம் குறைந்த நடுத்தரக் குடும்பங்களின் பாவனைக்காக எலெக்றிக் கார்களை மாதம் 100 ஈரோக்கள் கட்டணத்துக்கு வாடகைக்கு வழங்கும் அரசின் திட்டம் புத்தாண்டில் தொடங்கவுள்ளது.

அதிபர் மக்ரோன், கார்பன் வெளியேற்றத்தைத் குறைத்துச் சூழல் பேணும் மாற்றத்துக்கான தனது திட்டங்களில் ஒன்றாக இதனை 2022 தேர்தல்கால வாக்குறுதிகளில் வெளியிட்டிருந்தார். அந்தத் திட்டம் 2024 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் ஆரம்பமாகிறது என்பதை அவர் தனது ‘எக்ஸ்(‘X) சமூக ஊடகத் தளத்தில் வீடியோ மூலம் அறிவித்திருக்கிறார்.

குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்தம் நூறு ஈரோக்கள் வாடகையில் புதிய எலெக்றிக் காரைப் பெற்றுக் கொள்ள வேண்டுமா?

நிபந்தனைகள் இவைதான்.

⚫14 ஆயிரத்து 400 ஈரோக்களுக்குக் குறைந்த வருடாந்த வருமானத்தைப் பெறுகின்ற தனிநபர்கள் –

⚫தங்களது தொழில் இடத்துக்குச் செல்வதற்காகச் சொந்தமாகக் காரைப் பயன்படுத்தும் கட்டாயத்தில் இருப்பவர்கள் –

⚫வீட்டில் இருந்து குறைந்தது 15 கிலோ மீற்றர்கள் தொலைவில் தொழில் இடத்தைக் கொண்டிருப்பவர்கள்-

⚫தங்களது தொழிலின் நிமித்தமாக வருடாந்தம் 8 ஆயிரம் கிலோ மீற்றர்களுக்கும் அதிகமாக வாகனம் செலுத்துகின்ற சாரதிகள் –

ஆகியோர் இந்த வாடகைக் கார் திட்டத்தில் இணைந்துகொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுச் சூழல் அமைச்சின் https://www.ecologie.gouv.fr/mon-leasing-electrique என்ற இணைய இணைப்பில் இவை தொடர்பான மேலதிக விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

இந்தத் திட்டத்துக்காக எலெக்றிக் கார்களை வாடகைக்கு வழங்குகின்ற நிறுவனங்கள் பலவற்றுடன் அரசு ஜனவரியில் உடன்படிக்கைகளைச் செய்துகொள்ளவுள்ளது.

2024 ஆம் ஆண்டில் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையான எலெக்றிக் கார்களையும் 2025 ஆம் ஆண்டில் சுமார் 50 ஆயிரம் கார்களையும் வாடகைக்கு வழங்க எதிர்பார்ப்பதாக அதிபர் மாளிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">