மீண்டும்  தலைவராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற வருகிறது.இந்ந மாநாட்டிலேயே பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதில்  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். 2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருப்பதால் கட்சியை பலப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த மாநாட்டை நடத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். இன்றைய மாநாட்டில் கட்சியின் சில முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என பேசப்பட்டு வந்த நிலையிலும் தற்போது அவ்வாறான மாற்றம் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.