உலக தமிழர் பேரவை சந்திப்பு தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கை: பிரித்தானிய தமிழர் பேரவை.
உலக தமிழர் பேரவையுடனான சந்திப்பில் பௌத்த மதகுருமார் பன்முகதன்மையை ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள முன்னொருபோதும் இல்லாத அறிவிப்பு தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என பிரித்தானிய தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
மேலும், இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலம் முதல் இலங்கையின் அரசியலில் பௌத்த மதகுருமார் ஆதிக்கம் செலுத்தியமையே தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்காக தமிழ் சிங்கள அரசியல் தலைவர்கள் மத்தியில் கைச்சாத்திடப்பட்ட ஒவ்வொரு உடன்படிக்கையும் கைவிடப்பட்டமைக்கான முக்கியமான காரணம் இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வரலாற்றுரீதியான வன்முறைகளும் இனப்படுகொலைகளும் எவர் ஆட்சிக்கு வந்தாலும் நாட்டை ஒற்றை இனமொழி மத நாடாக மாற்றுவதே சிங்கள அரசாங்கங்களின் நோக்கம் என்பதற்கான உறுதியான ஆதாரங்களாக காணப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளது. உலக தமிழர் பேரவையுடனான சந்திப்பில் பௌத்த மதகுருமார் பன்முகதன்மையை ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியாகியுள்ள முன்னொருபோதும் இல்லாத அறிவிப்பு தமிழ் மக்கள் மத்தியில் இது தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் நோக்கத்துடனான அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செயற்பாடுகள் குறித்த பிரகடனம் எந்த கலந்தாலோசனைகளும் இன்றி இரகசியமாக வைக்கப்பட்டிருந்தமையும் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாலய பிரகடனம் குறித்த ஆவணத்தை வெளியிடுவதற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்தாலோசிப்பது மிக அவசியமானதாகும் இந்த சந்திப்பிற்கு முன்னரே அந்த ஆவணத்தை பகிரங்கப்படுத்தியிருக்கவேண்டும் ஆனால் அது இடம்பெறவில்லை. உலக தமிழர் பேரவை 2015 இல் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில்விக்கிரமசிங்க ஜனாதிபதியாகவும் பதவி வகித்தவேளை இவ்வாறான முயற்சியொன்றை மேற்கொண்டு எதிர்பார்த்தது போல அது மோசமாக தோல்வியடைந்தது இ அந்த முயற்சி ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் செயற்பாடுகளை மேலும் நீடிப்பதற்கும், மீண்டும் வன்முறைகள் நிகழாமலிருப்பதை உறுதி செய்வதற்காக நாட்டை மீள்கட்டமைப்பிற்கு உட்படுத்துமாறு விடுக்கப்படும் வேண்டுகோள்களை கையாள்வதற்கும் மைத்திரிபால சிறிசேன ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுத்த தந்திரோபாயம் என்பதை உணருவதற்கு உலக தமிழர் பேரவைக்கு ஐந்து வருடங்கள் எடுத்தது என தெரிவித்துள்ளது.
சுதந்திரத்திற்கு பின்னரான அனைத்து இலங்கை அரசாங்கங்களினதும் தோல்வியடைந்த கொள்கைகள் மீண்டும் மீண்டும் வன்முறைகள் இடம்பெறுவதற்கும் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும் அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் ஊழலிற்கும் தண்டனையிலிருந்து விலக்களித்தல் பொருளாதார மந்தநிலை இராணுவமயமாக்கலிற்காக தொடர்ந்தும் நிதி வீணடிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளன. இதன் காரணமாக தமிழ்மக்களின் பிரச்சினைகளை ஆழமாக அணுகாமல் சாதாரணவிடயமாக கருதி கையாள்வது அரசியலமைப்பு ரீதியில் தீர்வை காணவேண்டும் என்ற தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றப்போவதில்லை-நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவை பெறாமல் எந்த ஆதரவும் இல்லாமல் அரசமைப்பு மாற்றங்கள் சாத்தியமாகப்போவதில்லை.
விடயங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் ரணில்விக்கிரமசிங்கவின் கடந்த காலத்தை அறிந்துள்ளதால் உலக தமிழர் பேரவையுடனான சந்திப்பு ரணில் விக்கிரமசிங்கவிற்கு சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும் புலம்பெயர் தமிழர்கள் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை உள்ளக ரீதியில் தீர்வை காண்பதற்கு உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஊக்குவித்தல் என்ற போர்வையில் தமிழர்களின் வேண்டுகோள்களை மூடிமறைப்பதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும்.