சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வில் மேடையேறி பலரது பாராட்டுக்களையும் பெற்றது மெய்வெளி அரங்க இயக்கத்தினரின் ‘நான் புதைக்கப்பட்டவன்’ நாடகம்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தின் 2023ம் ஆண்டுக்கான நிகழ்வுகள் நேற்றைய தினம் London Barnet பகுதியில் 10.12.2023 ஞாயிறு மாலை 2.00 மணிமுதல் நடைபெற்றிருந்தது.
பிரபல ஊடகவியலாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பிரான்சிஸ் ஹரிசன் உட்பல பல மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்ட மேற்படி நிகழ்வில் மெய்வெளி அரங்க இயக்கத்தினரின் ‘நான் புதைக்கப்பட்டவன்'( I am Buried) என்ற சிறப்பு நாடக மேடையேற்றம் பலரது மனங்களையும் கவர்ந்திருந்தது. நாடக கருப்பொருளும் ஆற்றுகை செய்யப்பட்ட முறைமையும் நடிகர்களின் தேர்ந்த நடிப்பாற்றலும் மனித உரிமை என்ற கருவூலத்தின் மேல் மேற்குலகின் நடைமுறைகளை கேள்விக்குட்படுத்தும் ஒரு ஆற்றுகையாக இடம்பெற்றிருந்தது.
அவையில் இருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பிரமுகர்களையும் ஏனையவர்களையும் வெகுவாக பாதித்தவிட்டிருந்த மேற்படி அரங்க ஆற்றுகையானது மெய்வெளி நாடகப் பயிலக மற்றும் ஊடகத்தின் இயக்குனர் திரு.சாம் பிரதீபன் அவர்களினால் எழுதி இயக்கப்பட்டிருந்ததோடு மெய்வெளியின் இணை  இயக்குனர்   றஜித்தா அவர்களின் இணை இயக்கத்திலும் நிர்வாகத்திலும் காத்திரமாக அரங்காடப்பட்டிருந்தது.  நாடக மேடையேற்றத்தின் நடிகர்களாக மெய்வெளி நாடகப் பயிலக மாணவர்களும் மெய்வெளி அரங்க இயக்கத்தின் ஏனைய நடிகர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.