கஞ்சா,போதை மாத்திரைகள் வைத்திருந்த பௌத்த பிக்கு கைது.

திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த பாடசாலை ஆசிரியரும் விகாரை ஒன்றின் விகாராதிபதியுமான பௌத்த பிக்குவை கைது செய்துள்ளனர்.

ஆனதம்குளம சோமரதன என்ற இந்த பௌத்த பிக்கு 4 ஆம் கட்டை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் விகாராதிபதியாக கடமையாற்றி வருகின்றார்.

உப்புவெளி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய தேடுதலை மேற்கொண்ட அதிகாரிகள், 17 போதை மாத்திரைகள்,80 மில்லி கிராம் கஞ்சா,அடமானப் பொருட்களாக பெறப்படட 4 செல்போன்கள், ஒரு தொலைக்காட்சி,2 எரிவாயு கொள்கலன்கள்,சாரதி அனுமதிப்பத்திரம்,4 தேசிய அடையாள அட்டைகளை பிக்குவிடம் இருந்து கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பௌத்த பிக்கு தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.