வரலாற்று சாதனைப் படைத்த நானுஓயா நு/நாவலர் கல்லூரி.

செ.திவாகரன்

எழில் தவழ் மலையகத்தின் நுவரெலிய கல்வி வலயம் சார் நானுஓயா நாவலர் கல்லூரி தனது 33 வருட கல்வி வரலாற்றில் சாதனை தடம் பதித்துள்ளது.

இப்பாடசாலை தரம் 6-13 வரையில் சுமார் 800 மாணவர்களைக் கொண்ட 1C பாடசாலையாகும். 2022/2023 வெளியாகிய க.பொ.த (சா/தர) பரீட்சையில் 97 மாணவர்கள் தோற்றி (60%) மாணவர்கள் தனது உயர்தர கல்வியை தொடர தகுதிப்பெற்றுள்ளனர் .

இதில் விவேகானந்தன் துஸ்மிதா எனும் மாணவி அனைத்து பாடங்களிலும் அதி திறமை சித்தி பெற்று (9A ) சாதனைப் படைத்துள்ளார். இவரது தந்தை கிளோஸோ தோட்டத்தையும் தாய் ஈஸ்டல் தோட்டத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஈஸ்டர் தோட்டத்தை சேர்ந்த சுந்தரராஜ் தனுஷியா (5A 4B), பாமஸ்டர் தோட்டத்தை சேர்ந்த யோகேஸ்வரன் நிசாந்தினி (5A 2B 2C), எடின்பரோ தோட்டத்தை சேர்ந்த கிளேமன்ட் டிலுக்ஸினி (4A 1B 4C), மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ரவீந்திரன் ஜதுர்தனி ( 3A 1B 5C) சித்தியினையும் பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது

கடந்த வருடம் உடரதல்ல தோட்டத்தைச் சேர்ந்த S.யுவராஜ் ( 7A 2B) சித்திகளைப் பெற்றிருந்தார் இம்முறை கடந்த ஆண்டை விட இப்பெறு பேறு அதிகரித்துள்ளமை சிறப்பம்சமாகும்.என கல்லூரியின் முதல்வர் தெரிவித்ததோடு இப்பாடசாலையின் உப அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களின் தன்னிகரற்ற பங்களிப்பே இவ்பெறுபேற்றிற்கு காரணமெனவும் கல்லூரியின் முதல்வர் திரு T.விஸ்வநாதராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்