தேர்தலின் எதிரொளி -12 பாஜக எம்.பி.க்கள் இராஜினாமா.

எம்.பி பதவியை ராஜினாமா செய்த 10 எம்.பி-க்களிலிருந்து மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களுக்கு புதிய முதல்வர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தலில் இரண்டு மத்திய அமைச்சர்கள் உட்பட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் களமிறக்கப்பட்டனர்.

மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க பெரும் வெற்றியைப் பெற்றது.இரண்டு மத்திய அமைச்சர்கள் உட்பட 10 எம்.பி-க்களும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-க்களாக தேர்வுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களிலிருந்து மூன்று பேர் புதிய முதல்வர்களாகத் தேர்வுசெய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, மத்திய அமைச்சர்கள் இருவர் உட்பட அந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எம்.பி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள்.பா.ஜ.க வெற்றிபெற்ற மூன்று மாநிலங்களிலும் முதல்வர் என யாரும் முன்னிறுத்தப்படவில்லை. தேர்தல் வெற்றிக்குப் பிறகும்கூட, புதிய முதல்வர்களின் பெயர்களை பா.ஜ.க அறிவிக்கவில்லை.