தமிழகத்தில் தொடரும் மழை: சென்னையை விட்டு வெளியேறும் மக்கள்.


தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அமலாக உள்ள நிலையில், சென்னையில் இருந்து பலர் வாகனங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்கின்றனர். இதனையடுத்து சென்னையில் இருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும்செங்கல்பட்டின் பரனூர் சுங்கச்சாவடியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் வரிசையாக நிற்கின்றன.இ-பாஸ் அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே பிற மாவட்டங்களுக்குள் அனுமதிக்கப்படுகின்றன. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன. இதுதவிர உரிமம், தலைக்கவசம், முகக்கவசம் இல்லாமல் வரும் இருசக்கர வாகனங்களை பொலிஸார் பறிமுதல் செய்கின்றனர்.