மிக்ஜாம் புயல் பாதிப்பை தமிழக அரசு சரியாக கையாளவில்லை: சசிகலா கண்டனம்.
கடந்த 2 நாட்களாக மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை சென்னையையே புரட்டி போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பெரும்பாலான மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அனைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மழைப்பாதிப்பை அரசு கையாண்ட முறை குறித்து சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது 20 நாட்களுக்கு முன்பே புயல் குறித்த தகவல் தமிழக அரசுக்கு வந்தது. புயல் பாதிப்பு குறித்து முன்னதாகவே அறிவித்தும், பாதிப்புகளை தமிழக அரசு சரியாக கையாளவில்லை.ரூ.4000 கோடி அனைத்து பணிகளையும் செய்து முடித்து விட்டோம் என கூறுகின்றனர். இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இதற்கு ஆதாரம் பெருமழை தான். அரசு வாய் வழியாகவே எல்லாவற்றையும் சொல்கிறது. நிகழ்வை காட்டுவதில், தற்போது ஆளும் திமுக அரசு விளம்பர அரசியல் செய்கிறது என விமர்சித்துள்ளார்.