இலங்கைத் தேர்தல் தொடர்பான வெளியான தகவல்.

அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தின் பின்னரே ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜனாதிபதி தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, தேர்தல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்திருந்தது. கட்சிகள் மத்தியில் ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்திய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டு இலங்கையில் தேர்தல் இடம்பெறும் என பிரித்தானியாவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இவ்வாறான நிலையில், சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் குறித்து மிகவும் தந்திரமாக காய் நகர்த்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனக்காக ஆதரவை வலுப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், அடுத்த ஆண்டு மார்ச் மாதமே தேர்தல் நடத்தப்படும் என பலராலும் பரவலாக பேசப்படுகின்றது. எனினும், ஓகஸ்ட் மாதத்தின் பின்னரே தேர்தலை நடத்த ஜனாதிபதி தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.