சிறிதரன் எம்பி  தலைவர் பதவியில் இருந்து பின்வாங்கலாம் என ஈ.பி.டி.பி தெரிவிப்பு.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் கட்சியின் தலைமைத்துவத்துவ பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஆனால் சிவஞானம் சிறீதரனுக்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினுடைய ஆசன ஒதுக்கீட்டில் தான் இடம் கொடுக்கப்பட்டதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஏற்கனவே கூறி இருக்கின்றார்கள் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஸ்ரீரங்கேஸ்வரன்தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும்  சுமந்திரன் தென்னிந்திய திருச்சபை உள்ளிட்ட சில கிறிஸ்தவ அமைப்புக்கள் கொடுத்த அழுத்தத்தின் ஊடாக அவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்ததாக ஒரு விமர்சனம் இருந்து வருகின்றது.
ஆகவே இரண்டு பேரும் போட்டிக்கு தெரிவாகி இருக்கின்ற சூழலிலே பிரபாகரன் அவர்களுக்கு பாலா அண்ணா எப்படி ஒரு பக்க பலமாக இருந்தாரோ அதுபோல சம்பந்தன் ஐயாவுக்கு சுமந்திரன் பக்கபலமாக இருப்பதாக வடமராட்சி கிழக்கு கட்டக்காட்டிலே நடைபெற்ற சந்திப்பிலே சிவஞானம் சிறீதரன் கூறியிருக்கின்றார்.

ஆகவே நாங்கள் இந்த இரண்டு விடயங்களையும் ஒப்பீட்டளவில் பார்க்கின்ற பொழுது சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தீவுப் பகுதிகளிலே அவருக்கு பின்னணியான உறவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.அந்தவகையிலே இரண்டு பேரும் தமிழரசுக் கட்சியின் தலைமையை எடுப்பது என்ற விடயத்தில் இறுதிக் கட்டத்தில் இருவரும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவார்கள் என்பதைத்தான் நாங்கள் அவதானிக்க கூடியதாக உள்ளது.

சீ.வி.கே சிவஞானம் ஐயா, மாவை சேனாதிராஜா ஐயா போன்ற தலைவர்கள் பலர் நெருக்கடியான காலகட்டத்திலே இந்த கட்சியை காத்து வந்தவர்கள் என்பதை நாங்கள் ஒரு அரசியல் கட்சி என்ற வகையில் தெரிந்து வைத்திருக்கின்றோம். ஆகவே இந்தவகையில் அந்த கட்சியினுடைய முடிவுகள் தான் தீர்வாக இருக்கும் என்பது தெரியும். ஆனாலும் சிவஞானம் சிறீதரன் பின்வாங்குவார்கள் என்ற கருத்தும் தொண்டர்கள் மத்தியில் கூறப்படுகிறது என்றார்.