மிக்ஜாம் புயல் -சென்னையில் 20 விமானங்கள் ரத்து!

புயல் மற்றும் கனமழை காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநில பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகம் முழுவதும் இதுவரை 120 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீட்டுக்குள் புகுந்து இருப்பதாக கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்துள்ளது.

சென்னையில் 24 இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் வீட்டிற்குள் புகுந்து இருப்பதாக கூறப்படுகிறது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை மற்றும் காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் மற்றும் தண்ணீர் தேங்கியுள்ளதால் அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில், குறிப்பாக  6,000க்கும் மேற்பட்ட தீயணைப்பு துரையின் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில், கப்புயல் மற்றும் கனமழை பாதிக்கும் நிலை குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு கொடுக்கப்படுகிறது. இந்த அழைப்பை தொடர்ந்து உடனடியாக தீயணைப்பு படையினர் சம்பவம் இடத்திற்கு சென்று மரங்கள் மற்றும் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.