போதகருக்கு ஒருசட்டம் ,தேரருக்கு ஒரு சட்டமா? -சாணக்கியன்

தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் எனக் கருத்துத் தெரிவித்த அம்பிட்டியே சுமண தேரருக்கு ஒரு சட்டமும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிற்கு இன்னுமொரு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் கைதான போதகர் ஜெரோம் பெர்ணான்டோ ICCPR சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 13 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த ICCPR சட்டம் சிறுபான்மை தமிழ் பேசும் மக்களுக்கும், எண்ணிக்கையில் சிறுபான்மையான மக்களுக்கும் மாத்திரமே பயன்படுத்தப்படுகின்றது.

அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் அவர்கள் தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என்பதற்கு ஏன் இன்னும் அவரை கைது செய்யவில்லை?

போதகருக்கு ஒரு சட்டம் தேரருக்கு ஒரு சட்டமா?” என நாடாளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.