பிலிப்பைன்- மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் .

பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மிண்டானாவோவில் இன்று அதிகாலை இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் 6.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் கட்டிடங்களில் அதிர்வு ஏற்பட்டுள்ளதுடன், இதுவரையில் எந்தவித உயிர் சேதமும் மற்றும் பாதிப்பும் ஏற்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பிலிப்பைன்ஸின் மிண்டானாவோவில் கடந்த 2 ஆம் திகதி 7.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

கடந்த நான்கு நாட்களுக்குள் தொடர்ந்து இரு தடவைகள் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பிலிப்பைன்ஸ் மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.