கிண்ணியா-கடும் மழையினால் பெரிதும் பாதிப்படைந்துள்ள வீதிகள்.

ஏ.ஆர். பஹ்மிர்- திருகோணமலை

கிண்ணியா காக்காமுனை மற்றும் கதிர் அடப்பன்ச் சேனை வீதிகள் பெய்து வரும் கடும் மழையினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்..

குறித்த இவ் வீதிகள் கடந்த 30 வருடங்களாக எந்த வித அபிவிருத்தி அடையாமலும் கவனிப்பாரற்று இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாடசாலை மாணவர்கள் கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் வேறு தேவைகளுக்காக பயணம் செய்வதிலும் பெரும் சிரம்மங்களை எதிர்கொள்வதாகவும் பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்..

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் சீர் செய்து தருமாறும் வேண்டுகோல் விடுக்கின்றனர்.